அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது

பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது
கலெக்டர் உமா மகேஸ்வரி பேச்சு


கரூர், ஜன.16-

பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என்று கலெக்டர் உமா மகேஸ்வரி பேசினார்.

ஆலோசனை கூட்டம்

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிவதை தடை செய்யும் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஸ்கேன் மைய மருத்துவர் களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை
யில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற் றது.

இக்கூட்டத்தில் பெண் பாலினம் குறைவதனால் சமுதாயத்தில் ஏற்படும் தாக்கம், ஆண்,பெண் பாலின தேர்வை தடைசெய்யும் சட்டம் குறித்த விளக்கம் மற்றும் சட்டத்தினை மீறுபவர்கள் மீதான தண்டனைகள், தனியார் ஸ்கேன் மையங்களின் செயல்பாடுகள், பதிவேடு பராமரித்தல், அறிக்கை அனுப்புதல், பாலின விகிதத்தை நிலை நிறுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும், தனியார் ஸ்கேன் மைய மருத்துவர்களின் கடமை மற்றும் ஒத்துழைப்பு குறித்தும் மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி எடுத்துரைத் தார். அவர் பேசும் போது தெரிவித்ததாவது:-

வேதனைக்குரியது

ஆண்,பெண் இருபாலரின் பிறப்பு விகிதம் சரிசமமாக இருந்திட வேண்டும். இயற்கையின் நியதிக்கு எதிராக சிலர் பெண் குழந்தை வேண்டாம் என மறுத்து கருவில் அழித்தல் மற்றும் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்தல் என அறியாமையால் பெண் இனத்திற்கு எதிரான காரியங்களை செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக பெண் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. தாய்மையைப் போற்றும் நமது நாட்டில் பெண் குழந்தை பிறப்பதை தடுப்பது சட்டப்படி குற்றம் என்பது மட்டுமல்லாமல் பெரும் அவமானகரமான செயலும் ஆகும். இது வேதனைக்குரியது.

24 பெண் குழந்தைகள்

கரூர் மாவட்டத்தில் தொட்டில் குழந்தைத் திட்டத் தின் கீழ் சேர்க்கப்பட்ட 27 குழந்தைகளில் 24 குழந்தைகள் பெண் குழந்தைகள் ஆகும். எனவே, இதுபோன்று செயல்களை தடுத்திட மருத்துவர்கள் கருவுற்ற தாய்மார்களுக்கு உரிய முறை யில் எடுத்துக் கூறுவதுடன் அவர்களது கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பது கண்டறிவது தடை செய்யப்பட்டுள்ள சட்டத் தையும், மீறுபவர் மீதான தண்டனை விவரத்தையும் தெரிவித்து இதுபோன்ற செயல்களை தடுத்திட வேண்டும். சட்டத்தின் மட்டு மல்லாமல் தார்மீகமாகவும் இப்பணி யினை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

உறுதிமொழி

இக்கூட்டத்தில் பாலினத் தேர்வு மற்றும் பெண் கருக்கொலைக்கு ஏதுவான செயல்களை மறுத்தல் தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து மருத்துவர்களும் ஏற்றனர்.

இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.இளமதி, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராமநாதன், மாவட்ட அரசு வழக்கறிஞர் குணசேகரன் மற்றும் கரூர் மாவட்ட அனைத்து ஸ்கேன் மையங்களின் மருத்துவர்கள், சுகாதாரத்துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

No comments: