அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

சூரியனை நெருங்குகிறது வெள்ளி

சூரியனை நெருங்குகிறது வெள்ளி


புது தில்லி, ஜன. 15: சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளிக் கிரகம் (வீனஸ்), சூரியனை மிகவும் நெருங்கி வந்துள்ளது.

இதனால், இரவில் வெள்ளிக் கிரகத்தை தெளிவாகக் காண முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். பொங்கல் அன்று வெள்ளிக் கிரகம் நீண்ட நேரம் வானில் ஒளிர்ந்ததாகவும், அடுத்த சில வாரங்களுக்கு அதனைத் தொடர்ந்து காண முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறினர்.

மார்ச் மாதத்தில் சூரியனுக்கும், பூமிக்கும் நடுவில் வெள்ளி இடம் பெயர்ந்து விடும் என்பதால் அதன் பின்னர் அதனைக் காண முடியாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

"சூரியன் மறைவுக்குப் பின்னர் சுமார் 3 மணி நேரத்துக்கு வெறும் கண்களால் வெள்ளிக் கிரகத்தை காண முடியும் என்று "ஸ்பேஸ்' அறிவியல் அமைப்புத் தலைவர் சந்தன் பூஷன் தேவ்கன் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தார்.

ரோம இதிகாசங்களில் "வீனஸ்' என்பது காதல் தேவதை. அந்த தேவதையின் பெயரால் அழைக்கப்படும் வெள்ளிக் கிரகம், அளவில் பூமியைப் போன்றது. ஆனால் அங்கு தண்ணீர் இல்லை. முழுக்க, முழுக்க கார்பன் டைஆக்ûஸடால் நிறைந்துள்ளது. இதனால், அந்தக் கிரகத்தில் சராசரியாக 900 டிகிரி (பாரன்ஹுட்) டிகிரி வெப்பம் நிலவுகிறது.

No comments: