அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, January 16, 2009

பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பதா? - மு.காங்கிரஸ் எம்.பி. சபையில் சீற்றம்!

பாடசாலைகளில் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிவதற்கு தடை விதிப்பதா? - மு.காங்கிரஸ் எம்.பி. சபையில் சீற்றம்!

கொழும்பு உட்பட நாட்டில் பல இடங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் பாடசாலைக்கு வரும்போது முஸ்லிம்களின் கலாசார ஆடையான பர்தாக்களை அணிந்து வரக்கூடாது என்று சில அதிபர்கள் உத்தரவிடுகின்றனர் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. சபிக் ரஜாப்தீன்(23/11/2008) நேற்று நாடாளுமன்றில் கூறினார்.


நாடாளுமன்றில் இடம்பெற்ற வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:-


முஸ்லிம் மாணவிகள் தங்களது கலாசார ஆடையான பர்தாவை அணிந்துதான் காலாகாலமாக பாடசாலைகளுக்குச் சென்று வருகின்றனர்.ஆனால் இப்போது சிங்களப் பாடசாலைகளில் இந்த ஆடைக்குத் தடை விதிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

கொழும்பில் யாசோதரா மற்றும் பாரன் ஜயதிலக போன்ற சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள் பர்தா அணியக் கூடாது என்று அப்பாடசாலை அதிபர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

இது எமது கலாசார ஆடை. இதை அணிய வேண்டாம் என்று கூறும் உரிமை எவருக்குமில்லை. இது தொடர்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.எமது மார்க்க விடயங்களில் தலையிடும் உரிமை எருக்குமில்லை என்பதை நான் மிகவும் திட்டவட்டமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் - என்றார்.

No comments: