அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, January 17, 2009

அமெரிக்கத் தேர்தல்! முஸ்லிம்களின் பார்வையில்...!!


சிறப்பு கட்டுரை:



அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் முடிய இன்னமும் இரு தினங்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் இருவரும் இறுதி நேரப் பிரச்சாரத்தில் புயல் வேகத்தில் ஈடுபடுகின்றனர்.


ஒஹாயா மாநிலத்தில் நடக்கும் பிரச்சாரத்தில் பராக் ஒபாமா அவர்கள் கலந்துகொள்ள, அருகில் உள்ள பென்சில்வேனியாவில் ஜோன் மக்கெய்ன் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.


அதிகளவு வாக்காளர்களைக் கொண்ட இந்த இரு மாநிலங்களும், அதிபராக வரப் போபவர் யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய மாநிலங்களில் அடக்கம்.

இப்போதைய தேர்தலில் கணிசமாக உள்ள முஸ்லிம்களின் ஓட்டுக்களும் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கூடியவை எதிர்பார்க்கப்படுகிறது.


ஏனெனில்,எல்லா நாட்டு மக்களும்,நாட்டு அளவில் சிந்தித்து,ஓட்டளிப் பவர்களாகவும்,


முஸ்லிம்கள் மட்டுமே அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தோர் ஆக இருப்பினும்,முஸ்லிம்கள் என்ற ஒரு ஐக்கியத்துக்குள் உட்பட்டு,சிந்தித்து ஓட்டளிப்பவர்கள் ஆகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை)மாலையே முடிவு தெரிந்துவிடும்.அல்லாஹ் யாருக்கு நாடுகிறானோ அவர் அடுத்த ஜனாதிபதியாவார்.அதுவரை பொறுத்திருப்போம்.



அமெரிகாவிலிருந்து...அபு ஜுல்பிகா.

No comments: