நடிகை ஜெயப்பிரதா (சமாஜ்வாடி) - ராம்பூர் (உ.பி.)
உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதி, முன்னாள் ராம்பூர் நவாப்பின் பரம்பரையைச் சேர்ந்த பேகம் நூர் பானுவின் கோட்டையாகும். அவரை எதிர்த்து ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஜெயப்பிரதா 2004-ல் போயிட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 2004-ம் ஆண்டு வரையில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயப்பிரதாவுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்க மறுத்துவிட்டது தெலுங்கு தேசம் கட்சி. இதனால் முலாயம் சிங் யாதவின் ஆதரவுடன் ராம்பூர் தொகுதியில் அப்போது போட்டியிட்டார் ஜெயப்பிரதா.
1991-ல் பி.ஜே.பி-யை சேர்ந்த ராஜேந்திர குமார் சர்மா, காங்கிரஸின் ஜுல்பிகர் கானை தோற்கடித்தார். ராம்பூர் தொகுதி வரலாற்றிலேயே பாராளுமன்றத்தில் இடம்பெற்ற முஸ்லிம் அல்லாத ஒரே பிரதிநிதி இவர் மட்டும்தான். நவாப் குடும்பத்தார் காங்கிரசை ஆதரிப்பவர்கள். காங்கிரசின் கோட்டையாகவே இத்தொகுதி திகழ்ந்து வருகிறது. 1998-ல் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நூர் பானுவை தோற்கடித்தார் பி.ஜே.பி-யின் முக்தார் அப்பாஸ் நக்வி. இதன் மூலம் இரண்டாவது தடவையாக இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றது பி.ஜே.பி. ஆனால் 1999-ல் நடந்த தேர்தலில் 1.15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நக்வியைத் தோற்கடித்தார் பானு.
2004-ல் போட்டி, பி.ஜே.பி-க்கும் காங்கிரஸுக்கும் அல்ல. சமாஜ்வாடிக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான். இங்கே இந்து வாக்காளர்கள் 21 சதவீதம் பேர் இருந்த போதிலும் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டது பி.ஜே.பி. மூன்றாவது இடத்தை மயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி பெற்றது.
No comments:
Post a Comment