சென்னை லண்டனிலிருந்து சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் அசன் அலிக்கு, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று சந்தேகிக்கப்படும் ஆசாமி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இது குறித்து சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். ராமநாதபுரம் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அசன் அலி. இவரது வீடு சென்னை நுங்கம்பாக்கம் நாகேஸ்வரராவ் தெருவில் உள்ளது. ஜன-11 அன்று இரவு அவர் வீட்டில் இருக்கும் போது மாலை 6.18 மணியளவில் அவரது செல்போனுக்கு ஒரு மர்ம தொலைபேசி வந்தது. மர்ம ஆசாமி ஒருவர் அவரை மிரட்டி இருக்கிறார். அவர் மிரட்டிய விவரம் வருமாறு: நீங்களும், உங்கள் ஆட்களும் சேர்ந்து கொண்டு எங்கள் தமிழினத்தைக் கெடுக்க நினைக்கிறீர்கள். உன்னையும் உன் குடும்பத்தையும் வீதிக்குக் கொண்டு வந்து விடுவோம். நீ எங்களைக் காட்டிக் கொடுக்கிறாய். ராஜபக்சேவுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாயா? நீ என்னடா அவருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறாய். கருணாநிதிக்கும் கடிதம் எழுதியிருக்கிறாய். அந்த இரண்டு கடிதமும் எங்களிடம் இருக்கிறது. உன் குடும்பத்தை வீதிக்குக் கொண்டு வருவது நிச்சயம். எங்கள் இனத்தை அழிக்க நினைத்த உனக்குப் பெரும் கஷ்டம் காத்திருக்கிறது. இவ்வாறு அந்த ஆசாமி கூறியிருக்கிறார். "யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? நான் என்ன தப்பு செய்தேன் என்பதை முதலில் சொல்லுங்கள்" என்று அசன் அலி கேட்டிருக்கிறார். "நான் யார் என்பது இருக்கட்டும். நீ ஏன் ராஜபக்சேவுக்கும் கருணாநிதிக்கும் கடிதம் எழுதினாய். உன்னைச் சும்மா விட மாட்டோம்" என்று கூறி விட்டு தொலைபேசி இணைப்பை அந்த மர்ம ஆசாமி துண்டித்திருக்கிறார். நான்கு மணி நேரம் இந்தத் தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. தன்னுடைய செல்போனுக்கு வந்த தொலைபேசி எண்ணுக்கு அசன் அலி தொடர்பு கொண்டிருக்கிறார். அவரை மிரட்டிய ஆசாமியே அந்த போனை எடுத்துப் பேசியிருக்கிறார். எதற்காக என்னை மிரட்டினீர்கள்? நான் என்ன தவறு செய்தேன் என்று அசன் அலி அவரிடம் கேட்டிருக்கிறார். அந்த ஆசாமி மீண்டும் தான் முன்பு கூறிய வாசகங்களையே மீண்டும் கூறியிருக்கிறார். பிறகு அசன் அலி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார். உடனே அசன் அலி நேராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றார். போலீஸ் கமிஷனரிடம் தொலைபேசியில் வந்துள்ள மிரட்டல் குறித்து புகார் தெரிவித்திருக்கிறார். முதலில் நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முரளி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன் பின் சைபர் குற்றப்பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. உதவி கமிஷனர் சுதாகர் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். லண்டனில் உள்ள தொலைபேசியிலிருந்து அசன் அலிக்கு மிரட்டல் வந்திருப்பதாக உதவி கமிஷனர் சுதாகர் கூறியிருக்கிறார். ஏற்கெனவே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் சென்னை வருகையின் போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப் போவதாக சென்னை, முத்தியால்பேட்டை, மெரீனா கடற்கரை காவல் நிலையங்களுக்கு தொலைபேசி மிரட்டல் வந்தது. அந்த தொலைபேசியும் லண்டனிலிருந்து வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளதை அடுத்து சர்வதேச போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அசன் அலிக்கும், லண்டனைச் சேர்ந்த மர்ம ஆசாமி மிரட்டல் விடுத்திருக்கிறார். அவர் விடுதலைப்புலி ஆதரவாளராக இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. |
Tuesday, January 13, 2009
அசன் அலிக்கு கொலை மிரட்டல
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment