இஸ்ரேலை கண்டித்து ஆர்பாட்டம் - PFI நெல்லை மாவட்டம்
அல்லாஹ்வினால் பரக்கத் செய்யப்பட்ட நமது மார்க்கத்தின் அடையாளமாக திகழ்க்கூடிய பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலையும் மற்றும் பலஸ்தீன் நாட்டையும் யூத பயங்கரவாதிகள் அடாவடியாக ஆக்கிரமித்து தனக்கென இஸ்ரேல் எனும் பெயரில் ஒரு நாட்டை உருவாக்கி அங்கு இருந்துகொண்டே பைத்துல் முகத்தஸை தாக்குவதும், நிராயுதபாணிகளான அப்பாவி ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோரை துப்பாக்கிகளை கொண்டும், பீரங்கிகளை கொண்டும் கடந்த பல வருடங்களாக கொன்றுகுவித்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த சில தினங்களாக இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் மத்தியில் அமைதி ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும் நிலையில் அந்த ஒப்பந்தத்தையும் மீறி திடீரென பலஸ்தீனத்தின் மீது ராக்கெட் மூலம் அணுகுண்டுகளை வீசி பல ஆயிரக்கணக்கான முஸ்லீம்களை கொன்று குவித்து வருகிறது.
இந்த கொலை வெறித்தாக்குதலை கண்டித்து உலக நாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து இந்தியா முழுவதும் மனித நீதி பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன் தொடர்சியாக 02.01.2009 அன்று மாலை 05.15 மணியளவில் கடையநல்லூர் நகராட்சி பூங்கா (மணிகூண்டு) அருகில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் பயங்கரவாத இஸ்ரேலை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
மனித நீதி பாசறை நகர தலைவர் S. எ. பஸ்லுர்ரஹ்மான் தலைமையில் மௌலவி M.Y. மஹ்பூப் அன்சாரி பைஜி (மனித நீதி பாசறை நெல்லை மாவட்ட செயலாளர்) அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள். எதில் ஜமாத்தார்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு பலஸ்தீன மக்களுக்காக குரல் கொடுத்தனர்.
தீர்மானங்கள்:
1. மத்திய அரசு பலஸ்தீன் மீதான இஸ்ரேலிய தாக்குதலை உடனே நிறுத்த பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
2. மத்திய அரசு இஸ்ரேலுடனான தூதரக உறவை உடனே துண்டிக்க வேண்டும்.
3. இஸ்ரேலுடனான ராஜ்ஜிய உறவுகளை மத்திய அரசு உடனே துண்டிக்க வேண்டும்.
4. இந்தியாவிலுள்ள இஸ்ரேலிய தூதரை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்.
5. மும்பை மற்றும் இந்தியாவில் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வெளியேற்ற வேண்டும்.
6. ஹமாஸ் உடனான உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment