மகனைக் காணவில்லையென போலி புகார்: பெற்றோரைத் தேடுகிறது போலீஸ்
கோவை, ஜன.17: மகனைக் காணவில்லை என்று போலி புகார் கொடுத்து நாடகமாடியதாக பெற்றோரை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கோவை கே.கே.புதூரைச் சேர்ந்தவர் செüந்தரராஜன் (57). டெக்ஸ்டைல் இயந்திரங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். இவரது மனைவி செüந்தர்யா (37). இவர்களின் மகன் சாம்சன் (10). தடாகம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 4-வது வகுப்பு பயின்று வருகிறான்.
டிசம்பர் 30-ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே குப்பையைக் கொட்டச் சென்ற சாம்சங்கை காணவில்லை என்று சாயிபாபாகாலனி போலீஸில் அச் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். கடத்தலில் வடவள்ளி இன்ஸ்பெக்டர் ராஜகோபாலுக்கு தொடர்பு இருப்பதாக அப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸôர் சிறுவனை தேடி வந்தனர். ஒண்டிப்புதூர் உள்ள ஓர் வீட்டில் சிறுவன் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகப் போலீஸôருக்கு தகவல் கிடைத்தது. அங்கே சென்று போலீஸôர் விசாரணை செய்துள்ளனர்.
இந் நிலையில், கோவை அரசு மருத்துவமனை அருகே சிறுவன் அழுது கொண்டே நின்றிருப்பதாக இருப்பதாக பெற்றோர் போலீஸôருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீஸôர் அரசு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் நிலையத்தில் நின்றிருந்த சிறுவனை மீட்டனர்.
போலீஸ் விசாரணையில், சிறுவன் சாம்சன் கூறியது:
ஆட்டோ டிரைவரான தனது உறவினர் வீட்டில் பெற்றோரே என்னை ஒப்படைத்தனர். அங்கேதான் நான்கு நாள்கள் இருந்தேன். பிறகு பெற்றோர் என்னை அழைத்து வந்து கோவை அரசு மருத்துவமனையில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். அங்கே தனியாக நின்று கொண்டிருந்தபோது போலீஸôரால் மீட்கப்பட்டேன் என்றான்.
இதுகுறித்து சாயிபாபாகாலனி போலீஸôர் கூறியது:
மகனை காணவில்லை என போலி புகார் கொடுத்த செüந்தரராஜன், சில ஆண்டுகளுக்கு முன்பு காரமடை பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார். அப்போது மின் கட்டணம் செலுத்துவதில் வீட்டு உரிமையாளருக்கும், செüந்தரராஜனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னையில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் சமரசம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது. வீட்டு உரிமையாளருக்கு ஆதரவாக இன்ஸ்பெக்டர் ராஜகோபால் நடந்து கொண்டதாக செüந்தரராஜன் கருதியுள்ளார். இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டரை பழிவாங்கத் திட்டமிட்டு, குழந்தையைக் கடத்திவிட்டதாக போலீஸில் புகார் அளித்து நாடகமாடியுள்ளனர்.
இது குறித்து செüந்தரராஜன் மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு செய்த போலீஸôர், அவர்களின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், வீடு பூட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண்:6) சிறுவனை ஆஜர்படுத்தி சீர்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனர். தலைமறைவான பெற்றோரை தேடும் பணியில் போலீஸôர் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment