தாய்லாந்தில் விசா கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு அகற்றுவது பற்றி அந்நாட்டின் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.
தாய்லாந்துச் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் பிரதமர் அபிசித் இந்தத்திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இதற்கிடையே நாட்டின் தெற்கே யாலா மாவட்டத்தில் நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப் பட்டனர்.
பிரதமர் பொறுப்பு ஏற்ற பிறகு அபிசித் முதல் முறையாக அப்பகுதிக்குப் பயணம் மேற் கொண்டிருக்கும் வேளையில் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
No comments:
Post a Comment