ஜப்பானின் கார் உற்பத்தி நிறுவனங்கள், நெருக்கடியை சந்திக்கும் மற்றொரு அறிகுறி தென்பட்டுள்ளது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன், பிப்ரவரி மாதத்துக்கும் ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தைவிட உற்பத்தியை பாதியாகக் குறைக்கப் போகிறது என்று ஜப்பானின் முன்னணி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
நான்கு மாத கால கட்டத்தில் நாளுக்கு 9,000 வாகனங்களாக உற்பத்தியை அந்நிறுவனம் குறைக்கும் என்றும் அதன் விளைவாக முழு நேர ஊழியர்கள் வேலை நேரம் பாதிக்கப்படலாம் என்றும் ஆதாரம் இல்லாமல் அசாஹி ஷிம்புன் குறிப்பிட்டது.
இது பற்றி டொயோட்டா நிறுவனத்தின் அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை.
No comments:
Post a Comment