அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஜெய்சால்மர் : அணு ஆயுதங்களை ஏந்திச் சென்று 290 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கைத் துல்லியமாகத் தாக்கவல்ல புதிய வகை பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இந்தச் சோதனை ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்ததன் படியே மேற்கொள்ளப்பட்டது. எந்த நாட்டையும் அச்சுறுத்துவதற்காக இது நடத்தப்படவில்லை," என்றார்.

எனினும், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையில் நடந்திருக்கும் இந்தியாவின் ஏவுகணை சோதனை என்பதால், இது முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் செல்லும் இந்த பிரம்மோஸ் ஏவுகணை 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது.

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள பாலைவனப் பகுதியில் இந்தச் சோதனை நடந்தது.

கடந்த 17-ம் தேதியே இந்தச் சோதனை நடத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் திட்டம் பின்னர் மாற்றியமைக்கப்பட்டது. இதற்கான காரணம் என்னவென்று அதிகாரிகள் விளக்கமளிக்கவில்லை.

No comments: