அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

வேலையிழக்கும் ஊழியர்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறிவிட்டது: மார்க்சிஸ்ட்

வேலையிழக்கும் ஊழியர்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறிவிட்டது: மார்க்சிஸ்ட்

கோயமுத்தூர், ஜன.11 தொழில்துறையின் தேக்கநிலை காரணமாக வேலையிழக்கும் ஊழியர்களுக்காக குரல் கொடுக்க திமுக தவறிவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் குற்றம்சாட்டியுள்ளார்.


கோயமுத்தூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


அவர் கூறியதாவது:


பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் அதன் முதலாளிகளுக்கும் பொருளாதார சலுகைகளை வழங்கவே காங்கிரஸ் கூட்டணி அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், லட்சக்கணக்கான பணியாளர்கள் மீது எந்த கவனமும் செலுத்தப்படவில்லை.


இதுகுறித்து திமுக உள்ளிட்ட காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும் எதுவும் பேசுவதில்லை. தொழிலாளர்களுக்கு ஆதரவானவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுக தனது நிலைப்பாட்டைக் கைவிட்டுள்ளது. தற்போது காங்கிரஸ் வழியில் திமுக சென்று கொண்டிருக்கிறது. திமுகவின் மவுனம் ஆச்சரியத்தை தருகிறது.


இந்திய}அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஆரம்பத்தில் திமுக எதிர்த்தது. ஆனால், பின்னர் தனது நிலையிலிருந்து விலகி காங்கிரஸ் அரசுக்கும் ஒப்பந்தத்திற்கும் ஆதரவாகச் செயல்பட்டது.


குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் தான் காங்கிரஸ் அரசுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு தெரிவித்தது. ஆனால், திமுக உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளும் அதை பின்பற்றத் தவறிவிட்டன.


இவ்வாறு பிருந்தா காரத் தெரிவித்தார்.

No comments: