அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

ஸ்லம்டாக்: அமிதாப் அடித்த பல்டி

ஸ்லம்டாக்: அமிதாப் அடித்த பல்டி PDF


உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனர் படத்தை தாம் சாடியதாக வெளியாகியுள்ள தகவல்களை அமிதாபச்சன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தமது வலைதளத்தில் ஸ்லம்டாக் பற்றி வந்துள்ள விமர்சனங்கள் தமது கருத்துக்கள் அல்ல என்றும் அவை தமது வலைதளத்தை பார்வையிட்டவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்லம்டாக் பற்றி தனது வலைதளத்தில் தாம் எழுதியதைப் படிக்காமலேயே, அந்த கட்டுரை வெளியிடப்பட்டதற்கான பின்னணியை தெரிந்து கொள்ளாமலேயே தம் மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள அமிதாப் இது ஒரு நகைச்சுவை என்று கூறியுள்ளார்.

உண்மை என்னவெனில், தனது வலைதளத்தில் சிலர் ஸ்லம்டாக் படம் பற்றி சாதகமாகவும், சிலர் கடுமையாக விமர்சித்தும் எழுதியிருந்ததாகவும், இதுபற்றி ஒரு விவாதம் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்துடன் தாம் இரு தரப்பு கருத்துக்களையும் தனது பிக் பி அமிதாப் வலைதளத்தில் வெளியிட்டதாகவும் அமிதாப் கூறியுள்ளார்.

லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன் இணையதளத்தின் வலை தளத்தில் அமிதாப் பற்றி கடுமையான விமர்சனம் வந்ததைத் தொடர்ந்து அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்

No comments: