அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Tuesday, January 20, 2009

அமெரிக்க பொருளாதார மந்தம்:விதியா,சதியா

அமெரிக்க பொருளாதார மந்தம் அரபுநாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. கடந்த
நாலு மாதங்களில் அரபு நாடுகள் (குவைத், சவூதி) $2.5 ட்ரில்லியன் டாலர்களை
இந்த பொருளாதார மந்தத்திலும், எண்ணை விலை குறைப்பாலும் இழந்துள்ளன.
http://news.bbc.co.uk/2/hi/middle_east/7834829.stm
http://www.aljazeera.com/news/articles/34/Arabs_lost_25_trillion_in_credit_crunch_.html
சிடிவங்கியின் மிகப்பெரிய பங்குதாரர் அரேபிய இளவரசர் அல்வாலித்.சிடியின்
பங்குவிலை அதலபாதாளத்துக்கு சரிந்துவிட்டது.அரேபியாவின் வாரன் ஃபப்பட்
என்றழைக்கப்பட்ட இவரது சிடிவங்கி முதலீடுகள் இன்று கடும்
விமர்சனத்துக்குளாககப்பட்டிருக்கின்றன. இதைப்பற்றிய பல கான்ஸ்பைரசி
தியரிகள் உலா வருகின்றன.ஆயில் பணத்தை திருட இது அமெரிக்கா வேண்டுமென்றே
செய்த சதி என்றும் செயற்கையாக பெட்ரோல் விலையை தரை மட்டத்துக்கு குறைத்து
வெனிஸ்வேலா, ரஷ்யா, ,மத்தியகிழக்கு நாடுகள், இரான் முதலிய அமெரிக்க
எதிரிகளை வீழ்த்த செயற்கையாக அமெரிக்கா உருவாக்கிய நிதி தட்டுப்பாடு
என்றும் கான்ஸ்பைரசி தியரிகள் உலா வருகின்ரன.
வெனிஸ்வேலாவின் சாவேஸ் அமெரிக்க ஆயில் கம்பனிகளை வெனிஸ்வேலாவிலிருந்து
துரத்தி அடித்து ஆயில தொழிலை தேசியமயமாக்கினார். பேரல் $35 ஆயில் விலையை
சமாளிக்க முடியாமல் வெனிஸ்வேலாவின் ஆயில் கினறுகள் வாடி
வதங்குகின்றன.முன்பு துரத்திய அமெரிக்க கம்பனிகளை மீண்டும் வரசொல்லி
கெஞ்சிக்கொண்டிருக்கிறார் சாவேஸ். இந்த கான்ஸ்பைரசி தியரிகள் உண்மையாக
இருந்தால் கோமாளி என்ரழைக்கப்பட்ட ஜார்ஜ் புஷ் தான் உலகின் சிறந்த
புத்திசாலி என்று பொருள்.

--

No comments: