ஒடுக்கப்படும் இனங்களே ஒன்று சேருங்கள்.......
பதிவு எழுதி பல நாட்கள்,அடிப்படையில் எதை எழுதுவது என்ற குழப்பம்,எப்படியாவது ஒரு பெட்டிசன் போடுங்கோ என்ற ஆதங்கத்தை அறிந்து ஒரு முறை அந்த தளம் சென்றேன்.அமெரிக்காவுக்கு நாங்கள் எப்பவும் அடிமைகளாக இருப்போம் என்ற தொனி அந்த தளத்தில் தொனிக்கிறது,வாக்கு போட இது தேவை அற்ற இடம் என்பது தெளிவாக தெரிந்தது,ஆனால் அந்த தளத்தின் இப்போதைய கேள்வி விலை பெட்டிசன்களால் செல்லும் வாக்காளர்களால் அதிகரித்து விட்டது,இந்த இணையத்தை எனக்கு ஒருவர் பேரூந்தில் பயணம் செய்கையில் அறிமுகம் செய்து பெரிய விளக்க உரையை 30 நிமிடத்தில் ஆற்றி முடித்தார்.இவரை எங்கேயோ பார்த்தமாரி இருக்கே என்று எனக்கு பொறி தட்டியது,அப்பதான் இவரை இவர் தான் என்று நினைவுசெய்தேன்,ஒரு முறை ஒரு வீடியோ கடையில் இவரை சந்தித்தேன்,மாவீரர் நாளுக்கு முதல் நாள்,கடைகளில் கார்திகைப்பூ விற்கப்படது,அவர் நிறையவே தேசியம் பேசினார்,ஒரு பூ வாங்குமாறு கேட்டபோது தன்னிடம் சில்லறை காசு இல்லை என்று சொல்லிவிட்டு சென்றவர் ஒரு 5 நிமிட இடை வேளையில் வந்து இன்னோரு படத்தினை சில்லறை காசு கொடுத்து வாங்க வந்தார்,படமும் வாங்கி சென்றார்,ஊதி பருத்த வயிறும்,வறுத்தெடுக்கும் இவரின் கதையும்,எப்படி ஒரு விடுதலை போரை அழிக்கும் என்பது கண்கூடான உண்மை,இப்படி தான் நிறைய பேர் அலையுறாங்கள்,இன்னொரு கொசுறு அவர் கேட்டார் பஸ் இலவசம் என்றால் கண்டிப்பாக நான் வாறேன் என்று அப்போது அங்கே வேலை செய்தவர் சொன்னார்,இல்லை அது இலவசம் ஆனால் நீங்கள் விரும்பினால் காசு கொடுக்கலாம் என்று,தேசிய புரட்சி கனிந்த்தது அவர் வரவேயில்லை,
அடுத்த பதிவு இங்கே ஐரோப்பாவில் இருந்து வந்துள்ளோர்கள்,, சீட்டும் வட்டியுமாக போராட்டத்தை விலை கூறிவிற்பவர்கள்,இவர்களின் வருகையால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களே,அவர்கள் எப்போதும் ஏதோ ஆங்கிலம்,பிள்ளை என்ற பெயரில் வந்து உள்ளார்கள் உண்மையில் சீட்டும்,வட்டியும் அவர்களின் சம்பாதிப்பு,இதனை விட ஏதோ பதிவு செய்து வேலையாம்,அடிப்படையில் தமிழ் அகதி பதிவாளர்களின் வேலையை இவர்கள் எப்படி பறித்திள்ளார்கள்,
இன்னும் ஒன்று இங்கே வில்லு படத்துக்கு டிக்கட் இல்லையாம்..............
இன்னும் தொடரும்.....
No comments:
Post a Comment