முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வென்று இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை கைப் பற்றியது. இந்த வெற்றிக்கு முத்தையா முரளிதரனின் அதிரடி ஆட்டமும் உறுதுணையாக இருந்தது.
வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது.
மிர்புரில் வெள்ளிக்கிழமை நடந்த இறுதிப்போட்டியில் இலங்கையும் வங்காளதேசமும் மோதின.
போட்டியில் 153 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.
ஆனால் முன்னணி வீரர்கள் போதுமான ஓட்டங்களை எடுக்காததால் ஒரு கட்டத்தில் இலங்கை அணி தோல்வியை எதிர் நோக்கியிருந்தது.
No comments:
Post a Comment