அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

பின்லேடன் மகன் பாகிஸ்தானில் தஞ்சம்

ஈரானில் தங்கியிருந்த சாத் பின்லேடன், அறக்கட்டளை நடத்துவதாக கூறி அல்கொய்தா இயக்கத்துக்கு நிதி உதவியும் மற்ற உதவிகளையும் செய்து வந்தார்.
கடந்த 2003-ம் ஆண்டு ஈரான் அரசு, சாத் பின்லேடனை கைது செய்தது.
ஆனால் பிறகு ரகசியமாக அவரை விடுதலை செய்து விட்டது. அதன் பிறகு அவரை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் வற்புறுத்தி வந்தன.
இந்த நிலையில் சாத் பின்லேடன் ஈரானில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அவர், பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. அமெரிக்க உளவுத்துறை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

No comments: